வட்டார செயல்பாடுகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்

Friday 17 August 2012

DINAMANI 17.08.2012 NEWS ABOUT KOOTTANI RESOLUTION

தலைமை ஆசிரியர்களை அலைக்கழிக்க வேண்டாம்: ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

First Published : 17 Aug 2012 01:02:15 PM IST
 நாகப்பட்டினம், ஆக. 16: புள்ளிவிவர சேகரிப்புக்காக ஊராட்சி ஒன்றிய பள்ளித் தலைமை ஆசிரியர்களை 

அலைக்கழிக்க வேண்டாம் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

 நாகையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டணியின் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

 பள்ளிகளின் மாதாந்திர அறிக்கையிலேயே போதிய புள்ளிவிவரங்கள் அளிக்கப்படும் நிலையில், புள்ளிவிவர சேகரிப்புக்காக அடிக்கடி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் 

நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால், ஏற்படும் அலைக்கழிப்பு மற்றும் மாணவர்களின் கல்வி பாதிப்பை கருத்தில் கொண்டு, மாதத்துக்கு ஒரு கூட்டம் என 

வரையறுக்க வேண்டும். நாகை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளி ஆய்வு மற்றும் பயிற்சிகளின் போது ஆசிரியர்களை 

கண்ணியமாக நடத்த வேண்டும். ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பொது மாறுதல் 

கலந்தாய்வுக்குப் பின்னர், விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும் ஆசிரியர் பணியிட மாறுதல்களை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

 கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப. முருகபாஸ்கரன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் ரா. முத்துக்கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் மு. 

லெட்சுமிநாராயணன், துணைத் தலைவர்கள் சொ. மணிமாறன், வெ. ஜெயந்தி, துணைச் செயலாளர்கள் ரா. நீலா புவனேஸ்வரி, மா. சித்தார்த்தன் உள்ளிட்டோர் கலந்து 

கொண்டனர்.

--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை