வட்டார செயல்பாடுகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்

Friday 16 March 2012

பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது: சர்வே-16-03-2012

பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது: சர்வே-16-03-2012

எழுத்தின் அளவு :
டெல்லி: கடந்த 2005ம் ஆண்டு, 134.6 லட்சமாக இருந்த பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை, 2009ம் ஆண்டில், 81.5 லட்சமாக குறைந்துவிட்டது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த, 2012ம் ஆண்டிற்கான பொருளாதார சர்வே கூறுகிறது.
மேலும், கல்விக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) செலவினம், 2006-07ம் ஆண்டிலிருந்த 2.72% என்ற அளவிலிருந்து, 2011-12ம் ஆண்டில் 3.11% என்ற அளவில் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்வேயின்படி, சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் விதிமுறைகள், கல்வி உரிமை சட்டத்தின்(RTE) விதிமுறைகளுக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது, கூடுதல் ஆசிரியர்கள், வகுப்பறைகள், கற்றல் உபகரணங்கள் ஆகியவற்றை ஒதுக்கி, 8 வருடங்கள் ஆரம்ப கல்வி என்ற சுழற்சியில் மாநிலங்களை ஈடுபடுத்தல், சிறப்பான முறையில் பள்ளிகளை மேற்பார்வையிடுவதற்கான ஆதரவை அதிகரிப்பது மற்றும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா திட்டத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
கடந்த 2011ம் ஆண்டு குறைந்த விலையிலான Tablet PC -ஐ நிறுவியது ஒரு சாதனையாக கூறப்பட்டுள்ளது.

வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்வு

வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்வு

First Published : 17 Mar 2012 12:34:03 AM IST



புது தில்லி, மார்ச் 16: மாதாந்திர சம்பளதாரர்கள் ஓரளவு பயனைடயும் வகையில் ஆண்டு வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் இது ரூ. 1.80 லட்சமாக இருந்தது.
 மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2012-13-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
 இதன்படி ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் வரை உள்ளவர்கள் இனி வருமான வரி செலுத்தத் தேவையில்லை. முன்னர் இது ரூ. 1.80 லட்சமாக இருந்தது.
 அத்துடன் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மேல் ரூ. 5 லட்சம் வரையிலான ஊதியம் பெறுவோர் 10 சதவீத வரி செலுத்த வேண்டும்.
 ரூ. 5 லட்சத்துக்கு மேல் ரூ. 10 லட்சம் வரையிலான ஊதியம் பெறுவோர் 20 சதவீத வரி செலுத்த வேண்டும். ரூ. 10 லட்சத்துக்கு மேலான ஊதியம் பெறுவோர் 30 சதவீத வரி செலுத்த வேண்டும் என்றார் முகர்ஜி.
 பெண்களுக்கு ரூ. 2 லட்சம் வரையான தொகைக்கு வரி கிடையாது. ரூ. 2 லட்சத்துக்கு மேல் ரூ. 5 லட்சம் வரையான தொகைக்கு 10 சதவீதமும், ரூ. 5 லட்சத்துக்கு மேல் ரூ. 10 லட்சம் வரையான தொகைக்கு 20 சதவீதமும், ரூ. 10 லட்சத்துக்கு மேலான தொகைக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படும்.
 நேரடி வரி வரைவை (டிடிசி) அமல்படுத்தும் நோக்கில் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக முகர்ஜி தெரிவித்தார்.
 ஆனால் நேரடி வரி வரைவை பரிசீலித்து வரும் நாடாளுமன்ற நிலைக்குழு வருமான வரி விலக்கு வரம்பை ரூ. 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. ஆனால் அதை முகர்ஜி செயல்படுத்தவில்லை.
 மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வசதியை 60 வயது முதல் 80 வயது வரையிலான மூத்த குடிமக்கள் பெறலாம். ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் ரூ. 5 லட்சம் வரையிலான தொகைக்கு 10 சதவீதமும், ரூ. 5 லட்சத்துக்கு மேல் ரூ. 10 லட்சம் வரையிலான தொகைக்கு 20 சதவீதமும், ரூ. 10 லட்சத்துக்கு மேலான தொகைக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையான தொகைக்கு 20 சதவீதமும், ரூ. 10 லட்சத்துக்கு மேலான தொகைக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படும்.
 நேரடி வரி வரைவு (டிடிசி) தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கைகள் ஆராயப்படுகின்றன. இதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
 இதன் மூலம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ள வரி விதிப்பு முறைக்கு மாற்றாக அமையும்.
 சேமிப்புகளின் மூலம் கிடைக்கும் தொகைக்கு வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ரூ. 10 ஆயிரம் வரை தொகை பெறுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார் முகர்ஜி.