வட்டார செயல்பாடுகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்

Friday 11 November 2011

தினமணி செய்தி 11.11.2011 தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்


தினமணி செய்தி 11.11.2011 தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

நாகப்பட்டினம், நவ. 10: அகவிலைப்படியை 58 சதமாக உயர்த்தி அறிவித்த தமிழக அரசுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவிப்பது என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரப் பொதுக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் ந. தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.
 மாநிலத் துணைத் தலைவர் இரா. முத்துகிருஷ்ணன், நாகை மாவட்டச் செயலர் மு. லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலர் கி. பாலசண்முகம் வரவு செலவு அறிக்கையைப் படித்தார்.
 கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மு. பாலசுப்பிரமணியனின் வீட்டை அத்துமீறிய அபகரிப்பிலிருந்து மீட்டு வழங்கிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கு. ராமர், நில அபகரிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் எம். குமாரராஜா ஆகியோருக்குப் பாராட்டு தெரிவிப்பது.
 இலவசப் பாடப் புத்தகங்களைப் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்வதற்காக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்ட நிதியைக் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பள்ளிகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
 ஆசிரியர்கள் நீண்ட விடுப்பில் செல்லும் பள்ளிகளுக்கு, அதே சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் உபரி எண்ணிக்கையில் உள்ள ஆசிரியர்களை மாற்றுப் பணிக்குப் பயன்படுத்த வேண்டும். நாகப்பட்டினம் சரகப் பள்ளிகளிலிருந்து மாறுதல் பெற்றுச் சென்றுள்ள ஆசிரியர்களுக்கு உடனடியாக எல்.பி.சி வழங்கக் கோருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டாரத் தலைவர் மு. தனுசுமணி நன்றி கூறினார்.