வட்டார செயல்பாடுகள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்

Thursday 29 September 2011

நாகை மாவட்டத்தில் மழை, வெள்ள அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைத் தொடர்பு எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது


நாகப்பட்டினம், செப். 28: நாகை மாவட்டத்தில் மழை, வெள்ள அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைத் தொடர்பு எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

  இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதையொட்டி, நாகை மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய வெள்ளக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் பணியாற்ற பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளக் கட்டுபாட்டு அறைக்கான தொலைபேசி எண் 1077. இந்தத் தொலைபேசி எண் கட்டணமில்லா சேவையைக் கொண்டது.
மழை, வெள்ளக் காலங்களில் பொதுமக்கள் ஏதேனும் தகவல் தெரிவிக்க விரும்பினால், 1077 என்ற தொலைபேசி எண்ணில் வெள்ளக்கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கலாம். அத்தியாவசியத் தேவைகளுக்கு கீழ்க்கண்ட அலுவலர்களின் (தொடர்புடையோரை) தொலைத் தொடர்பு எண்களைத் தொடர்புகொண்டு தகவல் அளிக்கலாம்.
  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - 04365 252500. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) 04365 253048. மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் - 04365 247400, 247800. மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் - 04365 253050. மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் - 04365 248300. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் 04365 242888. காவல் துறை வெள்ளக் கட்டுப்பாட்டு அறை - 04365 242999.
  பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் அலுவலகம் (காவிரி- கிழக்கு கோட்டம்), மயிலாடுதுறை -  04364 225904. பொதுப் பணித் துறை செயற்பொறியாளர், தஞ்சாவூர் - 04362 230251. வெண்ணாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர், திருவாரூர் - 04366 241347.
  மின்வாரியம், நாகப்பட்டினம் - 04365 224213. மீன்வளத் துறை உதவி இயக்குநர் - 04365 247992. நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை - 04365 242459. அரசுப் போக்குவரத்துக் கழகம், நாகை - 04365 248835. தீயணைப்புத் துறை, நாகை - 04365 242101. நாகை நகராட்சி அலுவலகம் - 04365 248055. அவசர ஊர்தி- 108.
  வருவாய்க் கோட்டாட்சியர், மயிலாடுதுறை- 04364 222033, 9445000462. வருவாய்க் கோட்டாட்சியர், நாகை-  04365 248833, 9445000461. வட்டாட்சியர், நாகப்பட்டினம்- 04365 242456, 9445000616. வட்டாட்சியர், வேதாரண்யம்- 04369 250456, 9445000617. வட்டாட்சியர், கீழ்வேளூர்- 04366 275493, 9445000618.
  வட்டாட்சியர், திருக்குவளை-  04366 245450, 9445000619. வட்டாட்சியர், மயிலாடுதுறை- 04364 222456, 9445000620. வட்டாட்சியர், தரங்கம்பாடி- 04364 289439, 9445000621. வட்டாட்சியர், சீர்காழி- 04364 270527, 9445000622. வட்டாட்சியர், குத்தாலம்- 04364 230666, 9894814521.