தனியார் பள்ளிகளுக்கு நலநிதி கணக்கீட்டுத் தாள்களை வழங்கக் கோரிக்கை
First Published : 22 Jan 2012 01:29:53 PM IST
நாகப்பட்டினம், ஜன. 21: நாகை மாவட்டத்தில் நீண்ட நாள்களாக வழங்கப்படாமல் உள்ள தனியார் பள்ளிகளுக்கான நலநிதி கணக்கீட்டுத் தாள்களை உடனடியாக வழங்க உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரப் பொதுக் குழு கூட்டம் நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் வட்டாரத் தலைவர் ந. தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.மாநிலத் துணைத் தலைவர் இரா. முத்துகிருஷ்ணன், மாவட்டச் செயலர் மு. லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலர் கி. பாலசண்முகம், பொருளாளர் மு. தனுசுமணி ஆகியோர் பேசினர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பள்ளிகளைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து அகில இந்திய ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெறும் 3 கட்ட போராட்டங்களிலும் திரளான ஆசிரியர்கள் பங்கேற்பது.
2011- 12-ம் ஆண்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும், சிறந்த பள்ளிகளுக்கும் பிப். 19-ம் தேதி பாராட்டு விழா நடத்துவது. இந்த விழாவுக்கு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில நிர்வாகிகளை அழைப்பது.
சில அரசியல்வாதிகளின் புகார்களை தீர விசாரிக்காமல், ஆசிரியர் சமுதாயத்துக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளும் போக்கை நாகை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கைவிடக் கோருவது. இந்த நிலை தொடர்ந்தால் போராட்டம் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment