பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது: சர்வே-16-03-2012
டெல்லி: கடந்த 2005ம் ஆண்டு, 134.6 லட்சமாக இருந்த பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை, 2009ம் ஆண்டில், 81.5 லட்சமாக குறைந்துவிட்டது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த, 2012ம் ஆண்டிற்கான பொருளாதார சர்வே கூறுகிறது.
மேலும், கல்விக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) செலவினம், 2006-07ம் ஆண்டிலிருந்த 2.72% என்ற அளவிலிருந்து, 2011-12ம் ஆண்டில் 3.11% என்ற அளவில் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்வேயின்படி, சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் விதிமுறைகள், கல்வி உரிமை சட்டத்தின்(RTE) விதிமுறைகளுக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது, கூடுதல் ஆசிரியர்கள், வகுப்பறைகள், கற்றல் உபகரணங்கள் ஆகியவற்றை ஒதுக்கி, 8 வருடங்கள் ஆரம்ப கல்வி என்ற சுழற்சியில் மாநிலங்களை ஈடுபடுத்தல், சிறப்பான முறையில் பள்ளிகளை மேற்பார்வையிடுவதற்கான ஆதரவை அதிகரிப்பது மற்றும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா திட்டத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
கடந்த 2011ம் ஆண்டு குறைந்த விலையிலான Tablet PC -ஐ நிறுவியது ஒரு சாதனையாக கூறப்பட்டுள்ளது.