நவம்பர் இறுதிக்குள் கோரிக்கையை ஏற்காவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஆசிரியர் சங்கம் அறிவிப்பு சென்னையில் ஜாக்டோ சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று வள்ளுவர் கோட்டம் அருகில் திரண்டனர். அங்கு அரசை கண்டித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.ஜாக்டோ அமைப்பை சேர்ந்த சத்திய ராஜன், லிங்கேசன் ஆகியோர் தலைமையில் 1000–க்கும் மேற்பட்ட ஆசிரியர் – ஆசிரியைகள் திரண்டு வந்திருந்தனர்.போராட்டம் குறித்து ஜாக்டோவின் உயர்மட்ட குழுஉறுப்பினர் எஸ்.சங்கர பெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 மாதமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த ஒருநாள் வேலைநிறுத்தத்தை அறிவித்த போதிலும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் 1 முதல் 12 வரையிலான வகுப்புகளை சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளிகளை மூடிவிட்டு போராட்டத்தில் இறங்கி உள்ளனர். பெரும்பான்மையான ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் வகுப்புகள் நடைபெறவில்லை. நவம்பர் 2–வது வாரத்துக்குள் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில் நவம்பர் இறுதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.எங்களது போராட்டத்தினால் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்புவகுப்பு நடத்தி சரி செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வாசுதேவன், சொர்ண லதா, உதயகுமார், எஸ். காயத்தாறு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நவம்பர் இறுதிக்குள் கோரிக்கையை ஏற்காவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
ReplyDeleteசென்னையில் ஜாக்டோ சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று வள்ளுவர் கோட்டம் அருகில் திரண்டனர். அங்கு அரசை கண்டித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.ஜாக்டோ அமைப்பை சேர்ந்த சத்திய ராஜன், லிங்கேசன் ஆகியோர் தலைமையில் 1000–க்கும் மேற்பட்ட ஆசிரியர் – ஆசிரியைகள் திரண்டு வந்திருந்தனர்.போராட்டம் குறித்து ஜாக்டோவின் உயர்மட்ட குழுஉறுப்பினர் எஸ்.சங்கர பெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 மாதமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த ஒருநாள் வேலைநிறுத்தத்தை அறிவித்த போதிலும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் 1 முதல் 12 வரையிலான வகுப்புகளை சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளிகளை மூடிவிட்டு போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
பெரும்பான்மையான ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் வகுப்புகள் நடைபெறவில்லை. நவம்பர் 2–வது வாரத்துக்குள் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில் நவம்பர் இறுதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.எங்களது போராட்டத்தினால் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்புவகுப்பு நடத்தி சரி செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வாசுதேவன், சொர்ண லதா, உதயகுமார், எஸ். காயத்தாறு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.